நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கோவை மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கில் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் கோவையில் களமிறங்கி வெற்றிபெறும் முனைப்பில் கமல்ஹாசன் இருப்பதாக அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய முடிவெடுத்தால் அதில் கோவை நாடாளுமன்ற தொகுதியை கட்டாயம் கேட்டுப் பெறுவது எனவும், மீண்டும் தனித்து போட்டியிடலாம் என முடிவு செய்தாலும் கோவையில் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.
இதையும் படிக்க : குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!
பாஜகவை பொறுத்தவரை கோவை நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அல்லது பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டால், திமுக கூட்டணியில் கமல்ஹாசனை இணைத்து அண்ணாமலைக்கு எதிராக கமல்ஹாசனை களம் இறக்கவும் திமுக கூட்டணி சார்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே கோவை தொகுதி பரபரப்பாக மாறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Kamal Haasan, Makkal Needhi Maiam