முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “நடமாடும் வங்கி, அட்சயப்பாத்திரம்...” - ஆடு, மாடு, கோழிகளை புகழ்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!

“நடமாடும் வங்கி, அட்சயப்பாத்திரம்...” - ஆடு, மாடு, கோழிகளை புகழ்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!

அமைச்சர் அனிதா ராதா கிரிஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதா கிரிஷ்ணன்

செலவை சமாளிக்கும் அட்சயப் பாத்திரமாக கால்நடைகள் விளங்குகின்றன என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆடு, மாடு, கோழிகளை நடமாடும் வங்கி, அட்சயபாத்திரம் என கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புகழ்ந்தார்.

சட்டப்பேரவையில் கால்நடைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,  “கால்நடை தொழில் என்பது சிறு குறு விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தந்து வருகிறது. கால்நடை வளர்ப்பு என்பது கிராமத்தினுடைய பொருளாதாரத்தை உயர்த்தக்கூடியதாக இருந்து வருகிறது.

அந்த வகையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் 3 - 4 மாடுகளும் வைத்திருந்தால் அவர்களுடைய பொருளாதார நிலை காக்கப்படுகிறது. அதேபோல 10 - 15 ஆடு வளர்த்து வருகிறார்கள் என்றால் குடும்பத்திற்கு எந்த நேரம் வேண்டுமானாலும் பணம் தரும் நடமாடும் வங்கியாக கால்நடைகள் விளங்குகின்றன.

top videos

    மேலும், கிராமத்தில் உள்ள தாய்மார்கள் கோழிகளை வளர்க்கின்ற போது 5 - 6 கோழிகளை வளர்க்கின்ற போது அது தினந்தோறும் அவர்களுக்கான செலவை சமாளிக்கும் அட்சய பாத்திரமாக விளங்குகிறது” என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Tamil Nadu