முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தானியங்கி மிஷின் மூலம் மது வழங்கினால் போராட்டம்- அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

தானியங்கி மிஷின் மூலம் மது வழங்கினால் போராட்டம்- அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி

அன்புமணி

தானியங்கி மிஷின் மூலம் மதுபானம் வழங்கும் டாஸ்மாக்கின் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு கடைகளில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் நிறுவ நடவடிக்கைகளில் உள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விற்பனைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.

தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும், தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்ணியாளர்கள் மேற்பார்வையில் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும்.

கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை பொறுப்பாளர்கள் அறிமுக விழா அதன் தலைவர் வழக்கறிஞர் பாலு தலைமையில் நடைபெற்றது.

விஸ்கோஸ் இழைகளுக்கு தரக் கட்டுப்பாடு.... விலக்கு அளிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீதித்துறையில் சாதனை படைத்த வழக்கறிஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். அப்போது பேசிய அவர், ‘தானியங்கி தொழில்நுட்ப மெஷின் மூலம் மது வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’என்று தெரிவித்தார்.

First published:

Tags: Anbumani ramadoss