முகப்பு /செய்தி /தமிழ்நாடு / என்எல்சி பற்றி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்- அழைப்பு இல்லாமல் அதிரடியாக நுழைந்த அன்புமணி- தலைமைச் செயலகத்தில் பரபரப்பு

என்எல்சி பற்றி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்- அழைப்பு இல்லாமல் அதிரடியாக நுழைந்த அன்புமணி- தலைமைச் செயலகத்தில் பரபரப்பு

அன்புமணி

அன்புமணி

எல்.எல்.சி நிறுவனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு இல்லாமல் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக வருகை தந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை தலைமைச் செயலகத்தில் என்எல்சி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அமைச்சர்கள், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் பங்கேற்ற பேச்சுவார்த்தை தொடங்கியது.

சட்டமன்றத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு சார்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என்றும் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் என்எல்சி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் என்எல்சி நிறுவன உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார்.

கூட்டத்தில் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், தி.மு.கவைச் சேர்ந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

top videos

    இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பாமகவிற்கு அழைப்பு வழங்கப்படாத நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்தனர். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.

    First published:

    Tags: Anbumani