முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒரு மாதம்தான் கெடு... 10.5% உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும்... அன்புமணி எச்சரிக்கை!

ஒரு மாதம்தான் கெடு... 10.5% உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும்... அன்புமணி எச்சரிக்கை!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுக்கும்

  • Last Updated :
  • Tamil Nadu |

ஒரு மாதத்திற்குள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மிகப்பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், ஒரு மாதத்திற்குள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக மீண்டும்  நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர்,  நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுக்கும் என்றும் எச்சரித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், திருவண்ணாமலை மட்டும் இன்றி, நிர்வாக வசதிக்காக கடலூர், திருச்சி, கோவை, மதுரை உட்பட 9 பெரிய மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் வாசிக்க: TNTET Paper-II : ஆசிரியர் தகுதித் தேர்வில் 2-ம் தாளில் தவறான விடைகள்: மறுமதிப்பீடு செய்ய ராமதாஸ் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஆரணியை தனி மாவட்டமாக பிரிப்பதற்கான சாத்தியக் கூறு தற்போது இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anbumani ramadoss