முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உங்கள் வாட்ச்சின் விலை என்ன...? செய்தியாளரின் கேள்விக்கு காட்டமான அன்புமணி...!

உங்கள் வாட்ச்சின் விலை என்ன...? செய்தியாளரின் கேள்விக்கு காட்டமான அன்புமணி...!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

நிலக்கரி விவகாரத்தில் தஞ்சாவூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா என அன்புமணி ராமதாஸ் கேள்வி.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை எழும்பூரில் பாமக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உங்கள் கைக் கடிகாரத்தின் விலை என்ன? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தன் கையை செய்தியாளர்களை நோக்கி உயர்த்தி, நான் வாட்ச் கட்டுவதே கிடையாது என்று தெரிவித்ததோடு, விவசாயிகள் பிரச்னை, ஆன்லைன் சூதாட்டம், வேலைவாய்ப்பின்மை இப்படி  தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது இந்த வாட்ச் பிரச்சனை தேவையற்றது என காட்டமாக கூறினார்.

மேலும் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்துப் பட்டியல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அனைத்து முக்கிய துறைகளையும் மத்திய அரசு தன்னிடம் வைத்திருக்கிறது. அண்ணாமலை வெளியிட்டதில் உண்மை தன்மை இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறினார்.

இதையும் படிக்க : உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்... சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ...!

தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ் என்எல்சி விவகாரத்தில் கடலூர் மாவட்டத்தை அழிப்பதற்கு சூழ்ச்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். நிலக்கரி விவகாரத்தில் தஞ்சாவூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா எனவும் கேள்வி எழுப்பினார்.

top videos

    கடந்த ஓராண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதுவால் வருமானம் வந்திருக்கிறது என்று சொன்னால் அதன் மூலமாக எத்தனை கோடி குடும்பங்கள் அழிந்து இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் மதுக்கடைகள் அனைத்தையும் தமிழக அரசு மூட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    First published:

    Tags: PMK, Pmk anbumani ramadoss