முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆவின் விலைக்குதான் பால் கொள்முதல்செய்கிறோம்... அமுல் நிறுவனம் விளக்கம்

ஆவின் விலைக்குதான் பால் கொள்முதல்செய்கிறோம்... அமுல் நிறுவனம் விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் அமுல் நிறுவனம் செய்யும் பால் கொள்முதலை எதிர்த்து அமித் ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், அமுல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம், தமிழகத்தில் பால் கொள்முதலை செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது என்றும், அமுல் பால் கொள்முதல் செய்தால் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி விடும் சூழல் ஏற்படும் என கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரத்திற்கு தமிழ்நாடு அமுல் பொறுப்பாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ’தமிழகத்தில் ஆவினுக்கு எதிராக வியாபாரம் செய்ய மாட்டோம். ஆவினின் கொள்முதல் விலையை நாங்களும் நிர்ணயித்து கொள்முதல் செய்வோம்.

தமிழகத்தில் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளோம். மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 95 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் ஆவின் நிறுவனம் 35 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. 60 சதவிகிதம் பாலை தனியார் தான் கொள்முதல் செய்கிறார்கள். ஆவின் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் கொள்முதல் செய்வதில்லை.

நாங்கள் நலிவடைந்த பால் விற்பனையாகாத கிராமங்களில் மட்டுமே கொள்முதல் செய்கிறோம். ஆவினின் கொள்முதல் விலையைவிட ஒரு பைசா ரூபாய் கூட அதிகரிக்க மாட்டோம்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல்... ஆவினுக்கு பாதிப்பு - அமித் ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

top videos

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 15 சுய உதவிக்குழு மூலம் 5,000 லிட்டர் பால் கொள்முதல் பெற்று வருகிறோம். அந்த பால் கிருஷ்ணகிரியில் குளிரூட்டப்பட்ட ஆலை மூலம் பால் பதப்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

    First published:

    Tags: Aavin, Amul, CM MK Stalin