முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இரட்டை இலை கிடைத்ததால் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்... - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

இரட்டை இலை கிடைத்ததால் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்... - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

அமமுக தலைவர் டிடிவி தினகரன்

அமமுக தலைவர் டிடிவி தினகரன்

ஹிட்லரை விட மோசமான மனநிலையில் இருந்தால் தான் 12 மணி நேர வேலை போன்ற மோசமான சட்டத்தை கொண்டு வர முடியும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu |

ஜெயலலிதாவின் உண்மை, தொண்டர்கள் எவ்வளவு காசு கொடுத்து அழைத்தாலும் செல்ல மாட்டார்கள். ஒரு சிலர் சுய லாபத்திற்காக பணத்திற்காக கட்சியிலிருந்து பிரிந்து செல்கிறார்கள் என்று  அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்  தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், ’12 மணி நேரம் வேலை என்று திமுக அரசு ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. இன்று அவர்களே அந்த மசோதாவை திரும்ப பெற்றதாக அறிவித்துள்ளனர். திமுக கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தில் அவர்களுக்கு கோரிக்கை வைத்தார்களே தவிர போராட்டங்கள் நடத்தவில்லை. ஹிட்லரை விட மோசமான மனநிலையில் இருந்தால் தான் இது போன்ற சட்டத்தை கொண்டு வர முடியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியும் எம்ஜிஆரின் சின்னமும் எடப்பாடி பழனிச்சாமி கையில் மாட்டிக்கொண்டிருக்கிறது என்கிற ஆணவத்தால் அவர்கள் போடும் ஆட்டத்தால் தான் மு.க.ஸ்டாலின் தலைகால் புரியாமல் செயல்படுகிறார்.  

திமுக திருந்தி விட்டது என்று நினைத்து மக்கள் அவர்கள் கையில் ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் நாங்க திருந்தவே மாட்டோம் என்பதை போல சட்டத்தை இயற்றி வருகிறார்கள்.

தானியங்கி மதுபான கடைகளை திறந்து கொண்டு இருக்கும் இவர்களை பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்.

திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலே சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறி கொள்ளலாம் என்று அறிவித்தனர். தற்போது நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. இந்த சிந்தனை அரசுக்கு வந்திருப்பதே பேரபாயத்தின் அறிகுறியாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இதையும் வாசிக்கதமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் மீதும் அண்ணாமலைக்கு அக்கறை இல்லை... இயக்குநர் அமீர் விமர்சனம்

அதுபோல, மக்கள் விரோத அறிவிப்புகளை இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து வெளிவிடுவதும் மக்களிடையே எதிர்ப்பு தோன்றிய பிறகு அதை பெருந்தன்மையாக அவர்கள் பின்வாங்குவதுமாக இருப்பது போல இன்றைக்கு பாசாங்கு செய்கிறார்கள்.

மொத்தத்தில் திமுக ஆட்சியிலே அவர்களின் பேச்சு ஒன்றாகவும் அவர்களுடைய செயல் ஒன்றாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த ஆட்சி முடிவுக்கு கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அதை தமிழ்நாட்டு மக்கள் செய்து முடிப்பார்கள். அதில், அமமுக தொண்டர்களின் பங்கு தான் முதன்மையானதாக இருக்கும் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் கூறுகிறேன்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றிய ஆட்சிக்கு வந்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் செய்கின்ற தவறான ஆட்சியால் இன்றைக்கு தமிழ்நாடு மீண்டும் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இதையும் வாசிக்கஇபிஎஸ் உருவாக்கிய பொதுக்குழு கலைக்கப்படுகிறது - ஓ.பி.எஸ் அதிரடி

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருப்பவர் சொல்வது போல ஒரு குடும்பத்தின் கையில் 30,000 கோடி ரூபாய் இருப்பதாக சர்ச்சை ஆடியோ வெளியாகியுள்ளது. இன்றைக்கு அவரே அதை மறுத்து பேசி வருகிறார். அந்த ஆடியோ கேசட்டின் உண்மை தன்மை அறிந்தால் நிச்சயம் அதன் உண்மைகள் வெளிப்படும். அந்த ஒரு குடும்பம் எந்த குடும்பம் என்பது வெளியிலே தெரியவரும். ஒரே ஒரு குடும்ப மட்டும்தான் இந்த ஆட்சியில் வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை. ஆணவத்தால் இந்த ஆட்சி முடிவுக்கு வரப் போகின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை தற்காலிகமாக கிடைத்துவிட்ட காரணத்தினால் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி விடலாம் என்று நினைத்து வலம் வந்து கொண்டிருக்கிறார். சுயநலத்தால் சுயலாபத்திற்காக இருக்கின்ற ஒரு சிலரை இன்றைக்கு விலை கொடுத்து வாங்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே கூண்டோடு காலியாகிவிட்டது என்று கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். இதுவரை கட்சியில் இருந்து சென்றவர்கள் இடத்தில் நிரப்பப்பட்ட நிர்வாகிகள், இருந்தவர்களை விட சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

தினகரன் தனி மனிதன் அல்ல. என்னோடு நிற்பவரகள் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள். அவர்களை எத்தனை கோடி கொடுத்தாலும் உங்களால் விலை கொடுத்து வாங்கி விட முடியாது. நீங்கள் வாங்கி சென்று இருப்பவர்கள் அனைவரும் வெத்து வேட்டுகள். யாரோ ஒரு சிலர் விலை போவதால் துவண்டு விடபோவதில்லை. நான் அமைதியானவன் தான்.. அதே நேரத்தில் ஆழமானவன்.. எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டேன்.

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வரும் வரை எங்கள் பணி ஓயாது என்று கூறினார்.

இதையும் வாசிக்கமதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எண்ணமில்லை - வைகோ திட்டவட்டம்

top videos

    பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு பேசிய தினகரன், கூட்டணி பற்றி ஏற்கனவே நாங்கள் சொன்னது போல மூன்று முடிவுகள் உள்ளன. (பாஜகவுடன் கூட்டணி, காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணி அல்லது தனித்து போட்டி) அது என்ன என்பதை வரும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: TTV Dhinakaran