முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜகவுக்கு 13 சீட்... எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை சொல்லி இபிஎஸ்ஸை சம்மதிக்க வைத்த அமித் ஷா... கோலாகல சீனிவாஸ் பகிர்ந்த தகவல்..!

பாஜகவுக்கு 13 சீட்... எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை சொல்லி இபிஎஸ்ஸை சம்மதிக்க வைத்த அமித் ஷா... கோலாகல சீனிவாஸ் பகிர்ந்த தகவல்..!

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தொடர்பாக பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று (புதன்கிழமை) டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்பில் அதிமுக - பாஜக கூட்டணியை வலுபடுத்துவது குறித்தும் திமுக மீது உள்ள புகார் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜக - அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது எனவும் தனக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எனத தகராறும் இல்லை என தெரிவித்தார்.

இதுதொடர்பாக  நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் பேசிய பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை கேட்டுள்ளதாகவும் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்,

இதையும் படிக்க : மன் கீ பாத்தில் பிரதமர் ஒருமுறை கூட அரசியல் பேசவில்லை... அமித்ஷா

மேலும் நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 13 தொகுதிகளில் போட்டியிடும் என கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கை கூட்டணி கட்சிக்கு கொடுப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம் தான் என பாஜக எடப்பாடி பழனிசாமியிடம் கூறி சம்மதம் வாங்கியது என தெரிவித்தார். தொடர்ந்து, சந்திப்பு முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியின் தோள்களை தட்டிக்கொடுத்து, ‘Aanewale Chief minister.. Congrats' (வாருங்கள் முதலமைச்சரே.. வாழ்த்துக்கள்) என தெரிவித்ததாக கூறினார்.

top videos

    மேலும் தமிழகத்தில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி சண்டைகள் நிலவி வந்த நேரத்தில், டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் வைத்து பேசியது கூட்டணியில் சுமூக உறவை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

    First published:

    Tags: ADMK, Amit Shah, BJP, Edappadi Palaniswami