முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “வறுமையை காட்டிலும் மனதில் இருந்த லட்சியமே வெற்றி பெற வைத்தது..!” சாதனை மாணவி நந்தினி

“வறுமையை காட்டிலும் மனதில் இருந்த லட்சியமே வெற்றி பெற வைத்தது..!” சாதனை மாணவி நந்தினி

சாதனை மாணவி நந்தினி

சாதனை மாணவி நந்தினி

சாதனை மாணவி நந்தினியின் எதிர்கால கனவுகளுக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் வாழ்த்துகள்.

  • Last Updated :
  • Chennai, India

பிளஸ் டூ பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினி, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்தார். பொதுத்தேர்வில் அவர் நிகழ்த்திய சாதனையை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி ஊரியர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அப்போது ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் மாணவி நந்தினிக்கு திருவள்ளூவர் சிலையை பரிசாக வழங்கி பாராட்டினார்.

இதுபோல் ஊழியர்களுடன் கலந்துரையாடிய அவர் ஏராளமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். நந்தினி பேசுகையில், “சென்னைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோமோ அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் ட்யூஷன் எதுவும் செல்லாமல், பள்ளிப்பாடம் வீட்டுப்பாடம் மூலமாகவே படித்தேன். மனப்பாடம் செய்தால் மறந்துவிடும் புரிந்துப்படித்தால் என்றும் நினைவில் இருக்கும். நாம்தான் நேரத்தை தேடிச் செல்ல வேண்டும் நேரம் நம்மை தேடி வராது. வீட்டில் இருந்த வறுமையை காட்டிலும் மனதில் இருந்த இலட்சியமும் உறுதியும் தான் என்னை வெற்றி பெற வைத்தது.” என்றார். சாதனை மாணவி நந்தினியின் எதிர்கால கனவுகளுக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் வாழ்த்துகள்.

First published:

Tags: 12th Exam results, Nandhini, Tamil News