முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்... வெளியானது மருத்துவ ஆவணங்கள்..!

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்... வெளியானது மருத்துவ ஆவணங்கள்..!

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் மருத்துவ ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரின் மருத்துவ ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுபவர்களின் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது சகோதரர் பல் பாதிப்பிற்குச் சிகிச்சை மேற்கொண்டதற்கான மருத்துவ ஆவணவங்கள் வெளியாகியுள்ளன. மார்ச் மாதம் 10 ஆம் தேதி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும், 15 நாள் நீதிமன்ற காவலுக்குப் பின்னர் 26 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர். அதன் பின்னர் 31 ஆம் தேதி பல் மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்குச் சென்றுள்ளனர்.

Also Read : திமுகவினரின் சொத்துப் பட்டியல் வெளியிடும் நேரம்... அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!

அப்போது மருத்துவர் மேற்கொண்ட ஆய்வில், 20 நாட்களுக்கு முன்பு பற்கள் உடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, அருண்குமார் மற்றும் அவரது சகோதரர் காவலில் இருந்தபோது பற்கள் உடைந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    இதனிடையே, பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், வரும் 17 மற்றும் 18 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் எனத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமுதா ஐஏஎஸ் விசாரணையைத் தொடர்வார் எனவும், பாதிக்கப்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Tirunelveli