முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கருணாநிதி பேனா சின்னத்திற்கு எதிராக சட்டப் போராட்டம்: அதிமுக ஜெயக்குமார்

கருணாநிதி பேனா சின்னத்திற்கு எதிராக சட்டப் போராட்டம்: அதிமுக ஜெயக்குமார்

அதிமுக ஜெயக்குமார்

அதிமுக ஜெயக்குமார்

பட்டன் தட்டினால் மதுபானம் வருவது தான் திமுக அரசின் சாதனையாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்

  • Last Updated :
  • Tamil Nadu |

மெரினாவில் கருணாநிதியின் பேனா சின்னம் அமைப்பதை மறு பரிசீலனை செய்யாவிட்டால் அதிமுக சார்பில் சட்டப்போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓட்டேரியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க மூத்த தலைவருமான ஜெயக்குமார் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், ‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இதையும் வாசிக்க"அதிமுகவை விமர்சிப்பவர்களை அண்ணாமலை தடுக்க வேண்டும்... இல்லையென்றால்..." - ஜெயக்குமார் எச்சரிக்கை

top videos

    பாஜக தமிழ்நாடு பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சமூக வலைதளத்தில் அதிமுகவை விமர்சனம் செய்ததை தவறு என அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பட்டன் தட்டினால் மதுபானம் வருவது தான் திமுக அரசின் சாதனையாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

    First published:

    Tags: DMK leader Karunanidhi, Karunanidhi statue, Karunanidhi's memorial