அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு மகேந்திரா ஸ்கார்பியோ கார் வழங்கப்படவுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் ஒரு பக்கம் வெடித்து கிளம்ப, நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி முடித்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வாகியுள்ளார். இந்த சூழ்நிலையில்தான் இரண்டு முறை அதிமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. மேலும் கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க; “உதயநிதி வளர வேண்டிய அமைச்சர்...” - சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக..!
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், அதிமுகவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மகேந்திரா ஸ்கார்பியோ காரை வழங்க இருக்கிறார். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த பொழுது அப்போதைய அவைத் தலைவர் மதுசூதனனுக்கு இனோவா கார் வழங்கப்பட்டது. பின்னர் அவர் மறைவை தொடர்ந்து அந்த கார் அதிமுக அலுவலகம் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் மகேந்திரா ஸ்கார்பியோ கார் அதி நவீன வசதிகளுடன் மறுஆக்கம் செய்யப்பட்டு தற்போது விற்பனையில் இருந்து வருகிறது. அந்த கார் அவைத் தலைவர் என்ற அடிப்படையில் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்பட இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, Edappadi Palaniswami