முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக ஆட்சியில் 55,000 லேப்டாப்கள்... அரசுக்கு ரூ.68 கோடி இழப்பு.. சிஏஜி அறிக்கை..!

அதிமுக ஆட்சியில் 55,000 லேப்டாப்கள்... அரசுக்கு ரூ.68 கோடி இழப்பு.. சிஏஜி அறிக்கை..!

மாதிரி படம்

மாதிரி படம்

68 கோடியே 71 லட்சம் ரூபாய் தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

அதிமுக ஆட்சியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை உரிய காலத்தில் வழங்காததால் அரசுக்கு 68 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டு போட்டி தேர்வுக்கு தயாராகும் 12-ம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க அரசின் உத்தரவின் பேரில் ELCOT நிறுவனம் சார்பில், 60 ஆயிரம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 79 மடிக்கணிகள் மட்டுமே போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதையும் படிங்க; ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்...

55 ஆயிரம் மடிக்கணினிகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த மடிக்கணினிகளின் பேட்டரிகள் உத்தரவாதம் காலாவதி ஆகிவிட்டதாகவும், இதனால், 68 கோடியே 71 லட்சம் ரூபாய் தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு எக்செல்ஸ் திட்டமும் குறைந்த பலன் கொடுத்து தோல்வியுற்றதாக தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: AIADMK, Laptop, TN Govt