முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு: ஜூன் 8-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு: ஜூன் 8-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரையும் கட்சியில் இருந்து நீக்கியதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது

  • Last Updated :
  • Tamil Nadu |

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுச் செயலாளர் பதவிக்கு மாற்றாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரையும் கட்சியில் இருந்து நீக்கியதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. பொது செயலாளர் நடவடிக்கைகள் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்ற விதி உள்ளதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இதே விதி தான் பின்பற்றப்பட்டது என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்க: திருத்தப்பட்ட அறிவிப்பு.. திருமண மண்டபங்களில் மது அனுமதியில்லை - புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட இதே வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வாதங்கள் நிறைவடைய வாய்ப்பில்லாததால், வழக்கை ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Chennai High court, OPS - EPS