முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்..." ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதம்..!

"அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்..." ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதம்..!

ஓபிஎஸ் தரப்பு வாதம்

ஓபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை திரும்பப் பெறத் தயார் என்று உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாதங்களை முன் வைத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர், தகுதி நீக்கம் செய்து விட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

இடைக்கால பொதுச் செயலாளரை பொதுக்குழு தேர்வு செய்தது செல்லாது எனவும் கட்சிக்குள் எடுக்கும் முடிவுகள் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார். உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல என்றும் வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக, தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் கட்சி அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட தயார் எனவும், கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், வழக்கை திரும்பப் பெற தயார் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami, Madras High court, O Panneerselvam