முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. இபிஎஸ் தரப்பு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. இபிஎஸ் தரப்பு மனு இன்று விசாரணை

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

வழக்குகள் காரணமாக அதிமுகவில் கட்சி ரீதியான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால் வேட்பாளர்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதன்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அதிமுக தரப்பு அனுப்பி வைத்துள்ளது.மேலும், கர்நாடக தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்குகள் காரணமாக அதிமுகவில் கட்சி ரீதியான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால் வேட்பாளர்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

top videos

    இந்நிலையில், அதிமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பிரதீப் எம். சிங் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

    First published:

    Tags: ADMK, Edappadi palanisamy, Tamil News