முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்... அதிமுக தலைமைக் கழகமும் பதிலளிக்க உத்தரவு

பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்... அதிமுக தலைமைக் கழகமும் பதிலளிக்க உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில், கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றாமல் தங்களை நீக்கியுள்ளதாகவும், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் பதிலளிக்கும்படி அதிமுக தலைமை மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில், கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றாமல் தங்களை நீக்கியுள்ளதாகவும், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இருவரையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வரும் 20-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தங்களை கட்சி சாராத உறுப்பினராக கருதாமல், அதிமுக எம்.எல்.ஏ.க்களாகவே அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும், எந்தப் பதிலும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

மனோஜ் பாண்டியன் தரப்பில், எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், ஜூலை 11-ஆம் தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து இந்த மனுக்கள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அதிமுக தலைமை மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளின் விசாரணையை அடுத்த மாதம் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

First published:

Tags: ADMK, Edappadi palanisamy, OPS - EPS