முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமித்ஷாவுடன் இபிஎஸ் இன்று சந்திப்பு... அதிமுக - பாஜக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வருமா?

அமித்ஷாவுடன் இபிஎஸ் இன்று சந்திப்பு... அதிமுக - பாஜக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வருமா?

இபிஎஸ் அமித்ஷா

இபிஎஸ் அமித்ஷா

EPS Delhi Visit | இன்று டெல்லி செல்லும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். சென்னையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் அவர் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார். நேரம் கிடைத்தால் பிரதமர் மோடியையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக மேலிடத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மாநிலம், புலிகேசி நகர் தொகுதியிலிருந்து வேட்பாளரை அதிமுக திரும்பப் பெற்றுள்ளது. முன்னதாக அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது என நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அமித் ஷா கூறியிருந்தார். தமிழக பாஜக தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் இருந்து வந்தாலும், தேசிய அளவிலான பாஜகவுடன், அதிமுகவுக்கு உள்ள உறவு சமூகமாகவே உள்ளது.

இதையும் படிங்க; IPL 2023 : மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ்

top videos

    எனவே, அமித் ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு நாடாளுமன்ற கூட்டணியை உறுதிப்படுத்துவதோடு, மாநில அளவிலான பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: AIADMK, BJP