முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம்- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அ.தி.மு.க

எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம்- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அ.தி.மு.க

ஓபிஎஸ், இபிஎஸ்

ஓபிஎஸ், இபிஎஸ்

எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.

  • Last Updated :
  • Chennai, India

எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையை வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் பேரவையில் எழுப்பினர். இந்தநிலையில், அ.தி.மு.க சார்பில் எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை இன்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், ‘பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களால் எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல துணை எதிர்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுத்தும் இதுவரை அறிவிக்கவில்லை. பெரும்பாலான உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவரை தற்போது வரை நீங்கள் அங்கீகரிக்கவில்லை’ என்று தெரிவிதார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ‘துணை எதிர்கட்சித் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். வழக்கு தொடர்பாக அவையில் நான் எதுவும் பேசவில்லை’ என்று தெரிவித்தார்.

சபாநாயகரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

top videos
    First published:

    Tags: ADMK