முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா...? பாஜக தேசிய பொறுப்பாளர் பதில்..!

அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா...? பாஜக தேசிய பொறுப்பாளர் பதில்..!

சுதாகர் ரெட்டி

சுதாகர் ரெட்டி

அதிமுகவுடனான கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என தமிழ்நாட்டிற்கான பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tiruvannamalai, India

பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி அதிமுகவில் சேர்ந்த நிலையில், இரு கட்சிகளின் தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும், அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேற வேண்டும் என்றும் தனித்து போட்டியிட வேண்டும் என்பதும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் நிலைப்பாடு என்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக அதிமுக தரப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கருத்துகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாட்டிற்கான பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அதிமுகவுடனான கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, பிரதமர் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சியை அதிமுக ஆதரிப்பதாக கூறினார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

First published:

Tags: AIADMK Alliance, BJP