முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் விவகாரம் : ”தீ பரவட்டும்” - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

ஆளுநர் விவகாரம் : ”தீ பரவட்டும்” - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

அரவிந்த் கெஜ்ரிவால் -மு.க.ஸ்டாலின்

அரவிந்த் கெஜ்ரிவால் -மு.க.ஸ்டாலின்

CM Stalin | மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் சட்டப்பேரவையின் அதிகாரத்தை நியமன ஆளுநர் குறைத்து மதிப்பிடக் கூடாது என முதலமைச்சர் பதிவு

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆளுநர் மசோதா தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியதுடன், தீ பரவட்டும் என்று தெரிவித்துள்ளார்.

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று, கடந்த வாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்ற தீர்மானத்தை அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று, பாஜக ஆட்சியில் அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ள கெஜ்ரிவால், இதேபோன்ற தீர்மானம் டெல்லி சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிந்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தீ பரவட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் சட்டப்பேரவையின் அதிகாரத்தை நியமன ஆளுநர் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Arvind Kejriwal, CM MK Stalin