முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாடு விட்டு நாடு மீன் முட்டைகள் கடத்தல்... விரட்டிப் பிடித்த எல்லை பாதுகாப்பு படை...

நாடு விட்டு நாடு மீன் முட்டைகள் கடத்தல்... விரட்டிப் பிடித்த எல்லை பாதுகாப்பு படை...

கைப்பற்றப்பட்ட மீன் முட்டைகள்..

கைப்பற்றப்பட்ட மீன் முட்டைகள்..

சமீபத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் இருந்து சுமார் ரூ.8.60 லட்சம் மதிப்புள்ள மீன் முட்டைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) சமீபத்தில் கைப்பற்றி உள்ளனர்.

  • Last Updated :
  • West Bengal, India

ஒரு நாட்டின் எல்லை வழியாக தங்கம் முதல் விலங்குகள் வரை பல கடத்தல் நடைபெறுவது பற்றிய செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இப்போது மீன் முட்டையையும் கடத்த துவங்கி விட்டார்கள்.

இந்த கடத்தல் முயற்சி வேறு எங்கோ நடைபெறவில்லை. இந்திய-வங்கதேச எல்லையில் தான். சமீபத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் இருந்து சுமார் ரூ.8.60 லட்சம் மதிப்புள்ள மீன் முட்டைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) சமீபத்தில் கைப்பற்றி உள்ளனர்.

இந்திய-வங்கதேச எல்லையில் கடத்தல்காரர்கள் வழக்கமாக தங்கம், வெள்ளி மற்றும் கால்நடைகளை எல்லைத் தாண்டி கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர இந்த எல்லையில் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த குற்றசாட்டுகளின் பேரில் பல கடத்தல்காரர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதும் உண்டு.

ஆனால் இம்முறை மீன் முட்டைகளை கடத்த நடந்த முயற்சி பாதுகாப்புப் படையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது மீன்கள் மற்றும் முட்டைகள் கைப்பற்றப்பட்டிருப்பது கடத்தல் கும்பல்கள் சட்டத்திற்கு புறம்பான தங்களது கடத்தல் செயல்பாடுகளை தக்கவைக்க புதிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் புதிய யுக்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சவுத் பெங்கால் எல்லைக்குட்பட்ட Ranaghat பகுதியில் உள்ள 68-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், சமீபத்தில் கடத்தல்காரர்கள் இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு சில பொருட்களை கொண்டு செல்ல முயன்றதை கவனித்ததாக எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

Read More : வெடித்து சிதறிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள்.. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு..

இந்தியாவில் இருந்து வங்கதேச எல்லையை நோக்கி சுமார் 10-12 பேர்(கடத்தல்காரர்கள்) பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வதைக் கண்டு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு வீரர்கள் தங்கள் உயரதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உத்தரவை தொடர்ந்து கடத்தல்காரர்களை வீரர்கள் நெருங்கினர். BSF வீரர்கள் தங்களை நெருங்கி வருவதை கண்டா மர்மநபர்கள் தாங்கள் கொண்டு வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை அப்படியே கீழே போட்டு விட்டு, அருகில் இருக்கும் எல்லையோர கிராமத்திற்குள் புகுந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனை தொடர்ந்து மீன் முட்டைகள் நிறைந்த 19 பிளாஸ்டிக் பைகளை வீரர்கள் மீட்டனர். பின் பறிமுதல் செய்யப்பட்ட மீன் முட்டைகள் Bagda காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இயாதே போன்றதொரு சம்பவத்தில் சில நாட்களுக்கு முன் போல்டோலா எல்லைப் பகுதியில் மீன் முட்டைகள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக தகவல் தெரிவித்த BSF வீரர்கள், நள்ளிரவில் சில நபர்கள் தங்கள் தோளில் சாக்குகளை சுமந்துகொண்டு எல்லையை நோக்கி வேகமாக வருவதை கவனித்ததாக கூறினர். இதனை தொடர்ந்து போல்டோலா எல்லைச் சாவடியில் பணியில் இருந்த 118-வது எல்லைக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் அவர்களை துரத்திச் சென்று நிற்குமாறு எச்சரித்தனர்.

top videos

    ஆனால் அவர்கள் பயந்து எடுத்து வந்த பைகளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். பின்னர் நடந்த சோதனையில் அப்பகுதியில் இருந்து மீன் முட்டைகள் நிரப்பப்பட்ட 21 பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து மேலும் மீன் முட்டைகள் அடங்கிய 20 பைகள் மீட்கப்பட்டன. 68-வது பட்டாலியனின் கமாண்டிங் ஆஃபிசர் கூறுகையில், நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சர்வதேச எல்லையில் எப்போதும் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்கிறார்கள். எனவே கடத்தல்காரர்கள் வீரர்களின் கண்களில் இருந்து எளிதில் தப்ப முடியாது. கடத்தல்காரர்கள் புதிய வழிகளில் கடத்த முயன்றனர், ஆனால் விழிப்புடன் இருந்த BSF வீரர்கள் அவர்களது முயற்சிகளை முறியடித்தனர் என்றார்.

    First published:

    Tags: India