முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 2024 மக்களவைத் தேர்தல்... அமித் ஷாவை தனித்தனியே சந்தித்துப் பேசிய எல்.முருகன், தம்பிதுரை..!

2024 மக்களவைத் தேர்தல்... அமித் ஷாவை தனித்தனியே சந்தித்துப் பேசிய எல்.முருகன், தம்பிதுரை..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய இணை அமைச்சர் எல். முருகனும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும்  தனித்தனியே சந்தித்த பேசினர். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவினரும், அதிமுகவினரும் கடந்த மாதம் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த வாரம்  நியூஸ் 18 நெட்வொர்க் சார்பில் நடைபெற்ற ரெய்சிங் இந்தியா நிகழ்ச்சியில் குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாகத் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதைத் தொடர்ந்து அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் தென்சென்னை உள்ளிட்ட 9 மக்களவைத் தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம் எல். முருகன் கூறியது பற்றி கேட்கப்பட்டபோது, 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு தாங்கள் தயாராக வேண்டும் என்றும், கூட்டணி நீடித்தாலும் தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் அது உறுதியாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது என்றும் எல்.முருகனின் கருத்துக்கு மாறுபட்டு பேசினார்.

தான் கூறிய கருத்துக்கு மாறுபட்டு அண்ணாமலை பேசிய நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எல். முருகன் சந்தித்து பேசியுள்ளார். இந்த பின்னணியில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக அதிமுக எம்.பி தம்பிதுரையும், அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்ற தம்பிதுரை, சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, எத்தனை இடங்கள் ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தம்பிதுரை அமித்ஷாவுடன் பேசியதாக கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: AIADMK, AIADMK Alliance