முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கிருஷ்ணகிரி ஆணவ கொலை.. முதலமைச்சர் பேச்சால் சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி!

கிருஷ்ணகிரி ஆணவ கொலை.. முதலமைச்சர் பேச்சால் சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Lok sabha | காவல்துறை செய்தி குறிப்பில் என்ன உள்ளதோ அதை தான் முதலமைச்சர் சொல்லி உள்ளார். தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறோம் என துரைமுருகன் கூறியதையடுத்து சமாதானம் ஆனார்கள்.

  • Last Updated :

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில் ஆணவக் கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் அதிமுக கிளை செயலாளர் என முதலமைச்சர் பதிலளித்ததால் அதிமுகவினர் கடும் அமளி ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி ஆணவக்கொலை குறித்து அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அப்போது பேசிய அவர், கிருஷ்ணகிரியில் அருகேயுள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், சரண்யா என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், ஜெகனை நடுரோட்டில் கொடூரமான முறையில் கொலை கொலை செய்தனர் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொலை செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட கொலை வழக்கு காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதிமுக கிளைச் செயலாளர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகநீதி அடிப்படையில் ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமான அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை பேணி காத்திட வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன்  என முதலமைச்சர் பேசினார்.

கைது செய்யப்பட்டவர் அதிமுக கிளைச் செயலாளர் என முதலமைச்சர் தெரிவித்ததற்கு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர் . அவர் அதிமுகவில் இல்லை என அவர்கள் முறையிட்டனர்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர் முதலமைச்சர் காவல்துறை குறிப்பில் என்ன இருக்கிறதோ அதை தான் சொன்னார் என பதில் அளித்தார். அதை ஏற்காமல் தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதையடுத்து, பேசிய அவை முன்னவர் துரைமுருகன் காவல்துறை செய்தி குறிப்பில் என்ன உள்ளதோ அதை தான் முதலமைச்சர் சொல்லி உள்ளார். தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறோம் என தெரிவித்ததால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

First published:

Tags: ADMK, Lok sabha, MK Stalin, Murder