முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு ஈபிஎஸ் தலைமையில் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...

பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு ஈபிஎஸ் தலைமையில் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...

மாதிரி படம்

மாதிரி படம்

ADMK Meeting | இந்தக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை கடந்த 28-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைதொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: ADMK, EPS