முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் நாளை தீர்ப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு..!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் நாளை தீர்ப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு..!

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் நாளை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்காக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வாதங்கள் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

top videos

    இந்நிலையில் பொதுக்குழுவின் தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் நாளை  தீர்ப்பளிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, O Pannerselvam