முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “தொண்டர்கள் விரும்பியதால் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி..!” - அதிமுக வழக்கில் ஈபிஎஸ் தரப்பு வாதம்

“தொண்டர்கள் விரும்பியதால் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி..!” - அதிமுக வழக்கில் ஈபிஎஸ் தரப்பு வாதம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்தம் மட்டுமே உள்ளது என்றும் அடிப்படை கட்டமைப்பு என்பதே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் 5வது நாளாக விசாரணைக்கு வந்தன.இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை வகுத்ததாக கூறினார்.

அதன்படி, மீண்டும் தொண்டர்களின் விருப்பத்தின்படியே பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளதாகவும் வாதிட்டார். அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்தம் மட்டுமே உள்ளது என்றும் அடிப்படை கட்டமைப்பு என்பதே இல்லை என்றும் தெரிவித்தார். அதனால், அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் செயல்பட்டதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியது தவறு என்றும் கூறினார்.

திமுக தலைவர்களை சந்தித்ததாக கூறப்பட்டதாலும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாலேயே ஓபிஎஸ்-ஐ நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.மேலும், உட்கட்சி விவகாரங்களில் முழுமையாக தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இந்த வாதங்களை எல்லாம் கேட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

First published:

Tags: ADMK, Chennai High court, Edappadi Palaniswami, O Pannerselvam, Tamil News