முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எம்.ஜி.ஆர் முதல் சசிகலா வரை... அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியில் நீடித்தவர்கள் யார் யார்?

எம்.ஜி.ஆர் முதல் சசிகலா வரை... அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியில் நீடித்தவர்கள் யார் யார்?

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா

ADMK | அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அக்கட்சியின் உச்சபட்ச அதிகாரமுள்ள பதவியாக பொதுச் செயலாளர் பதவி இருந்தது. அவருடைய மறைவைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரின் கட்டுப்பாட்டுக்கு கட்சி சென்ற பிறகு பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

தற்போது மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்குவதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் இந்த முயற்சியை எதிர்த்துவருகிறார். இந்தநிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவர்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

1972-ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக 1978-ம் ஆண்டு வரை நீடித்தார். இவரையடுத்து, நெடுஞ்செழியன் 1980 வரை இப்பொறுப்பில் இருந்தார். எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியனை அடுத்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த ப.உ.சண்முகம், 4 ஆண்டுகள் 275 நாட்களும், ராகவானந்தம் ஓராண்டு 216 நாட்களும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்தனர்.

இவர்களை அடுத்து மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்ஜிஆர், இறுதிக் காலம் வரை பொதுச் செயலாளராக இருந்தார். எம்ஜிஆர் இறப்புக்குப் பின்னர் 1989-ம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா, அன்று முதல் அவர் இறக்கும் வரை 27 ஆண்டுகள் 300 நாட்களுக்கு அந்த பதவியில் தொடர்ந்தார்.

இவரை தொடர்ந்து, வி.கே.சசிகலா வெறும் 48 நாட்கள் மட்டுமே அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். தற்போது, இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றால் அதிமுகவின் எட்டாவது பொதுச்செயலாளராகவும், அந்தப் பதவியை அலங்கரிக்கும் ஏழாவது தலைவராகவும் உருவெடுப்பார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் தகவல் தவறு- ஓ.பி.எஸ் தரப்பு விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர்கள்

எம்ஜிஆர் (1972 – 1978), (1986 -1987) 6 ஆண்டு, 316 நாட்கள்

நெடுஞ்செழியன் (1978 – 1980) 3 ஆண்டு, 24 நாட்கள்

ப.உ.சண்முகம் (1980 – 1985) 4 ஆண்டு, 275 நாட்கள்

ராகவானந்தம் (1985 – 1986) ஓராண்டு, 216 நாட்கள்

ஜெயலலிதா (1989 – 2016) 27 ஆண்டு, 300 நாட்கள்

சசிகலா (2016 – 2017) 48 நாட்கள்

First published:

Tags: ADMK, OPS - EPS