முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் நிறைவு: ஈபிஎஸ் பெயரில் 220 விருப்பமனுக்கள்...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் நிறைவு: ஈபிஎஸ் பெயரில் 220 விருப்பமனுக்கள்...

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ADMK General Secretary Election | நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவுபெற்றது .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு மொத்தம் 220 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து விருப்ப மனுக்களும் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வருகின்ற 26ஆம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று அதிமுக தேர்தல் ஆணையாளர்களான நத்தம் விசுவநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்திருந்தனர்.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதனையடுத்து தலைமை அலுவலகத்திற்கு உள்ளே சென்று பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வகையில் உரிய கட்டணம் செலுத்தி வேட்பு மனுவை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து பின்னர் தேர்தல் நடத்தும் நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடையில்லை என்றும் இந்த வழக்கில் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவரையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் என்னென்ன?

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு முதல் நாளில் 38 விருப்பமனுக்கள் பெறப்பட்டிருந்தன. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவுபெற்றது .

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை தவிர யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

First published:

Tags: ADMK, OPS - EPS