முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "அதிமுகவை விமர்சிப்பவர்களை அண்ணாமலை தடுக்க வேண்டும்... இல்லையென்றால்..." - ஜெயக்குமார் எச்சரிக்கை

"அதிமுகவை விமர்சிப்பவர்களை அண்ணாமலை தடுக்க வேண்டும்... இல்லையென்றால்..." - ஜெயக்குமார் எச்சரிக்கை

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK Jayakumar Press Meet | பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில் ஜெயக்குமார் பேச்சு

  • Last Updated :
  • Chennai, India

பாஜக நிர்வாகிகள் அதிமுக குறித்து விமர்சிப்பதை பாஜக மாநில தலைவர் தடுத்து நிறுத்தாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில பொருளாளர் எஸ். ஆர்.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, தமிழ்நாட்டில் எந்த முடிவையும் அண்ணாமலையே எடுப்பார் என்றும் அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் உணர்த்தியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: Exclusive : தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் : தமிழ்நாட்டில் வலுக்கும் எதிர்ப்புக்கு அண்ணாமலை விளக்கம்!

இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக நிர்வாகிகள் அதிமுக குறித்து விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

First published:

Tags: ADMK, Annamalai, BJP, Jayakumar