முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இபிஎஸ் மகன் மிதுன் அமெரிக்கா சென்றாரா...? நிரூபிக்க முடியுமா...? அமைச்சருக்கு ஜெயக்குமார் சவால்!..

இபிஎஸ் மகன் மிதுன் அமெரிக்கா சென்றாரா...? நிரூபிக்க முடியுமா...? அமைச்சருக்கு ஜெயக்குமார் சவால்!..

மிதுன் மற்றும் ஜெயக்குமார்

மிதுன் மற்றும் ஜெயக்குமார்

இபிஎஸ் மகன் மிதுன் அமெரிக்கா செல்லவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு பயணம் சென்றுள்ள நிலையில், அதனை இன்ப சுற்றுலா என விமர்சித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அவதூறு பரப்புவதா எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு அடித்து விரட்டியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் காட்டமாக குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ‘எடுபடாத மாநாடு’ எனவும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அமெரிக்கா சென்றார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு ஊரடங்கு...? கொரோனாவை விட கொடிய வைரஸ் பரவ வாய்ப்பு... WHO எச்சரிக்கை...!

இதற்கு பதிலடி தரும் விதமாக அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இன்றுவரை பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் தொடங்கி இருப்பதாகவும், திமுக அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் இந்த ஆட்சியில் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். புள்ளி விவரங்கள் மூலம் பதில் அளிக்கத் திராணியற்ற முதலமைச்சர், நிதி அமைச்சர் பெயரில் ஒரு பிதற்றலை அறிக்கையாக வெளியிட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

top videos

    மேலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு முன்போ அல்லது பதவியில் இருக்கும்போதும் இன்று வரை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அமெரிக்கா போகவில்லை என சவால் விடுகிறேன் என ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது அறிக்கை வெளியிட்ட தங்கம் தென்னரசுவோ மிதுன் அமெரிக்கா சென்றார் என்பதை நிரூபிக்க வேண்டும் இல்லாவிட்டால் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

    First published:

    Tags: ADMK, CM MK Stalin, EPS, Jayakumar, Thangam Thennarasu