எந்த இடத்திலும் அம்மா உணவகங்களை முடக்கும் எண்ணமில்லை. இதை அரசியாலாக்க வேண்டாம் என்று சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இன்றைய சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது "அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததால் முடங்கும் நிலையில் உள்ளதாக கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "எந்த இடத்திலும் அம்மா உணவகங்களை முடக்கும் எண்ணமில்லை. ஒரு உணவகத்தில் மாதத்துக்கு 4000 ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் 6000 சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. சில சீர்த்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனை அரசியலாக்க வேண்டாம்", என கூறினார்.
அமைச்சரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அம்மா உணவகங்கள் குறித்து பல்வேறு புகார்கள் வருகிறது. உணவகங்களுக்கு தரமான பொருட்கள் வழங்காததால் தரமான உணவு வழங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர்", என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "எந்த அம்மா உணவகம் என ஆதரத்தோடு குற்றச்சாட்டு சொன்னால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறே நடக்கவில்லை என கூறவில்லை. எங்கே நடக்கிறது என ஆதாரத்தோடு கூறினால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்", என கூறினார்.
இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அம்மா உணவகங்கள் குறித்து பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதனை ஆய்வு செய்ய வேண்டும்", என கோரினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், "சில ஊடகங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்புகிறார்கள். அவைகளுக்கு எல்லாம் வக்காலத்து வாங்க முடியாது. ஆதரத்தோடு சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்", என கூறினார்.
பின்னர் பேசிய எஸ்.பி.வேலுமணி, அம்மா உணவகங்களுக்கு திமுக அரசு உரிய நிதியை ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உனவகங்களுக்கு இந்த ஆண்டு 129 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானம் 15 கோடி தான் வருகிறது", என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, KN Nerhu, TN Assembly