முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கட்சி பிரச்னை இப்போதே தீர்க்காவிட்டால் இன்னும் 10 ஆண்டுகள் நீளும்: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் இதுதான்...

கட்சி பிரச்னை இப்போதே தீர்க்காவிட்டால் இன்னும் 10 ஆண்டுகள் நீளும்: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் இதுதான்...

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

ADMK Case in Chennai High Court | கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம் எனவும், கட்சியின் சூழல் மாறியதால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக உட்கட்சி பிரச்னையை இப்போதே தீர்க்காவிட்டால் இன்னும் 10 ஆண்டுகள் வரை நீளும் என குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு, திருத்தப்பட்ட விதிகளை ஏற்காவிட்டால் அடுத்த தேர்தலில் வேட்பாளரை அங்கீகரிக்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் பிரதி வாதத்தை முன்வைத்தனர். ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீதம் பேரின் ஆதரவு கூட ஓபிஎஸ்-க்கு இல்லை எனவும் தங்களுக்கு 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாலும், உட்கட்சி விவகாரம் என்பதாலும் நீதிமன்றம் தலையிடக் கூடாது எனவும், தேர்தல் முடிவை எதிர்த்து வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடரட்டும் எனவும் கூறினர். அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பினர் செயல்படுகின்றனர் எனவும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும் குற்றம்சாட்டினர்.

கட்சிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் பறிக்கப்படும் என விதி இருப்பதை சுட்டிக்காட்டிய ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் அணியினர் யதார்த்த நிலையை உணராமல், கற்பனை உலகத்தில் இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டனர். கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம் எனவும், கட்சியின் சூழல் மாறியதால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் வாதிட்டனர்.

இதையும் படிங்க: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000... நாளை பட்ஜெட்டில் வருகிறது முக்கிய அறிவிப்பு?

இந்த பிரச்சனையை இப்போதே தீர்க்காவிட்டால் இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் நீண்டு கொண்டே செல்லும் எனவும் திருத்தப்பட்ட விதிகளை அடுத்த தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால், வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட முடியாத நிலை ஏற்படும் எனவும் உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

First published:

Tags: Chennai High court, OPS - EPS