அர்ஜூனா.. அர்ஜூனா அம்பு விடும் அர்ஜூனா என ரசிகர்களின் மனதில் காதல் அம்பை ஏய்தியவர்தான் நமீதா. படங்களின் ப்ரமோஷன்களில் ஹாய் மச்சான்ஸ்.. எனப் பேசி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்தார். ஆரம்பத்தில் கொஞ்சம் ஃபேட்டாக இருந்த நமீதா இப்போது ஃபிட்டாகி இருக்கிறார். அவரது ஃபிட்னஸ் வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி வட்டமடிக்கும்.
கோடம்பாகத்தில் கொடிக்கட்டி பறந்த நமிதா கோட்டைக்கு போக்கும் ஆசையில் அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். பாஜகவில் இணைந்த நமீதா தேர்தல் பிரச்சார களத்திலும் குதித்தார். இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் அனல் பறக்கும் வேளையில் ஸ்டேடியம் கேலரிகளில் இருந்து பிரபல நடிகர், நடிகைகளை போட்டோக்களை போஸ்ட் செய்து இன்ஸ்டாவில் லைக்ஸ்களை அள்ள நாங்க எல்லாம் களத்திலே குதிப்போம் என இறங்கிவிட்டார் நமீதா.
இதையும் படிங்க : விபத்தில் சிக்கிய ‘தி கேரளா ஸ்டோரி' நடிகை ஆதா ஷர்மா - இப்போது எப்படி இருக்கிறார்?
கோவைக்கு போன நமிதா கிரிக்கெட்டில் பேட்டிங்.. பெளலிங் என மிரட்டி இருக்கிறார். அதுவும் புடவையில் நமீதா கிரிக்கெட் விளையாடிய வீடியோக்களும் போட்டோவும் இணையத்தில் தீயாய் பரவுகிறது. கோவை மதுக்கரை பகுதியில் இருந்த இந்த மாஸ் ஃபர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறார் நமீதா. கோவை தெற்கு பாஜக சார்பில் “பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி” மதுக்கரை பகுதியில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நடிகையும், பாஜக பிரமுகருமான நமிதா கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார். அப்போது தான் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்துள்ளார். மஞ்சள் நிறப்புடவையில் நமீதா கிரிக்கெட் விளையாடிய வீடியோதான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Namitha, Coimbatore, Tamil News