முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சி திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் கே.என்.நேருவுடன் நேற்று பார்வையிட்டார்.
கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மிகப்பெரிய உயரங்களை அடைவதற்குப் பல வலிகளையும், தியாகங்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை இந்த புகைப்படக் கண்காட்சி உணர்த்துகிறது என்று கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய ஆளுமையின் மகனாக இருந்தாலும் நிறைய விஷயங்களைத் தாண்டி, சாதனைகளைப் புரிந்து முதல்வராக வந்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து, முதல்வரின் சிறு வயது புகைப்படம் அவரை வெகுவாக கவர்ந்தாக கூறினார். இது போன்று, ஒரு துறை சார்ந்து ஒருவர் புரிந்த சாதனைகளைப் பார்க்கும் போது, அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறினார்.
மேலும், புகைப்படக்கண்காட்சிக்கு நடிகர்கள் மட்டும் வந்து பார்வையிடுகின்றனர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சென்னையில் நடிகர் கமல் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நடிகர்கள் வடிவேலு, சூரி ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர் என்று கூறினார். நடிகர்கள் பார்வையிட்டு வருவது, இது போன்ற கண்காட்சி நடக்கிறது என்பது வெளியில் தெரியப்படுத்துவதாக உள்ளதாகவும் கூறினார்.
Also Read : டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... குடியரசுத் தலைவருடன் சந்திப்பு..!
தொடர்ந்து, ஒரே நாளில் மாவீரன் படமும் ரஜினியின் டெய்லர் படமும் வெளியாகவுள்ளதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
செய்தியாளர் - சே.கோவிந்தராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, K.N.Nehru, Sivakarthikeyan