முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மனோபாலா மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது... ரஜினிகாந்த் இரங்கல்..!

மனோபாலா மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது... ரஜினிகாந்த் இரங்கல்..!

மனோபாலா - ரஜினிகாந்த்

மனோபாலா - ரஜினிகாந்த்

ஆகாய கங்கை என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான மனோபாலா, 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu |

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவுத்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், " பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில்,   தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான  மனோபாலா உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும், தலைமை கழக பேச்சாளருமான  மனோபாலாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மனோபாலா. ஆகாய கங்கை என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார். 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவர் இறுதியில் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்த நிலையில் மறைந்துள்ளார்.

இதையும் வாசிக்கTamil Live Breaking News : மனோபாலா உடல் நாளை தகனம்..!

top videos

    மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோபாலா உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Rajinikanth, Tamil Cinema