தமிழில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அரசியல்வாதியாகவும் வலம் வந்த இவர் இராமநாதபுரத்தில் இருந்து திமுக எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் விலகி அதிமுகவில் பணியாற்றி வந்த ரித்தீஷ், கடந்த 2019ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். 46 வயதில் ஜே.கே. ரித்தீஷ் மரணமடைந்தது திரையுலகினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்கிற மனைவி உள்ளார். அவருக்கு தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 41 வயதாகும் ஜோதீஸ்வரி, காரைக்குடியில் நகைத் தொழில் செய்துவரும் திருச்செல்வம் என்பவரிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளையும் வெள்ளி பொருட்களையும் வாங்கி இருக்கிறார்.
இதற்கான பணத்தை தராமல் ரூ.20 லட்சத்துக்கான 3 காசோலையை வழங்கி இருக்கிறார் ஜோதீஸ்வரி. இந்த காசோலையை திருச்செல்வம் வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் இல்லாதது தெரியவந்துள்ளது. இதையடுத்து தான் பணத்தை மொத்தமாக தந்துவிடுவதாக கூறி நீண்ட நாட்கள் கால தாமதம் செய்துள்ளார். ஜோதீஸ்வரி. சொன்னபடி பணத்தை தராமல் இழுத்தடித்ததால் ஜோதீஸ்வரி மீது காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் திருச்செல்வம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க; தங்கம் தென்னரசு - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்... ஓர் ஒற்றுமை, ஒரு வேற்றுமை..!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபிரதா, நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரிக்கு ரூ.60 லட்சம் அபராதமும், 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டார். நடிகரின் மனைவிக்கு காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ரித்தீஷின் ஆதரவாளர்களிடமும் உறவினர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.