முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கர்நாடகா தேர்தலில் பாஜகவின் பங்களிப்பு குறித்து கருத்து - கொலை மிரட்டல் வருவதாக எஸ்.வி.சேகர் பரபரப்பு புகார்

கர்நாடகா தேர்தலில் பாஜகவின் பங்களிப்பு குறித்து கருத்து - கொலை மிரட்டல் வருவதாக எஸ்.வி.சேகர் பரபரப்பு புகார்

எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர்

நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர் எஸ்.வி.சேகர். அவ்வப்போது மேடை நாடகங்களையும் அரங்கேற்றிவருகிறார். தற்போது பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்துவந்த எஸ்.வி.சேகர் அவ்வப்போது வெளியிடும் அரசியல் ரீதியான கருத்துகள் சர்ச்சையாகிவருகின்றன. கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நேரடியாகவும் மறைவுமுகமாகவும் கருத்துகளை தெரிவித்துவருகிறார்.

இதையும் படிக்க |  கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாக தனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துவருவதாகக் கூறி பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சில தினங்களுக்கு முன் கர்நாடக தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர்களின் பங்களிப்பு பற்றி ஊடகங்களில் பேசியதால் தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக  அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகரின் புகார் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்படுத்திவருகிறது. இதனையடுத்து அவரது புகாரில் பேரில் பட்டினம்பாக்கம் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

top videos
    First published:

    Tags: S.ve.sekar