முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

நடிகர் அஜித் - எடப்பாடி பழனிசாமி

நடிகர் அஜித் - எடப்பாடி பழனிசாமி

Ajith wish EPs | நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.

top videos

    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார். பலரும் நடிகர் அஜித்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் தொலைப்பேசி வாயிலாக நடிகர் அஜித்திற்கு இரங்கல் தெரிவித்தார். அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தனது வாழ்த்துகளையும் நடிகர் அஜித் தெரிவித்து கொண்டுள்ளார்

    First published:

    Tags: Actor Ajith, Ajith, Cm edapadi palanisami, EPS