முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஏசி, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் கூடுதல் மின் கட்டணமா? தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

ஏசி, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் கூடுதல் மின் கட்டணமா? தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

மின் கட்டணம்

மின் கட்டணம்

ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சார சாதனங்களை பயன்படுத்தும் வீடுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சார சாதனங்களை பயன்படுத்தும் வீடுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கோடை கால வெப்ப தாக்கத்தினால் ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சார சாதனங்களை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் உபயோகிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்காக, மின் வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையும் வாசிக்ககோடை வெயிலுக்கு ரெஸ்ட்.. 18 மாவட்டத்துக்கு கனமழை அலெர்ட் - வானிலை மையம் தகவல்

top videos

    இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீடுகளுக்கு நிலைக்கட்டணம் வசூலிப்பதில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. நிலைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்த பின்பு, அதன் மீதான அபராதம் என்பது முற்றிலும் தவறான செய்தி எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    First published:

    Tags: Electricity bill