ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், அவரது வங்கிக் கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. பொதுமக்களிடம் 1 லட்சத்திற்கு 30 ஆயிரம் வட்டி தருவதாக தருவதாக ஆசை காட்டி சுமார் 2,438 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர் . அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார் உள்ளிட்ட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் சம்மனை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து விட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பும் போலீசாரிடம் ஆஜராகாமல் ஆர். கே சுரேஷ் தலைமறைவாக உள்ளார்.
இதையடுத்து ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதால் அவரது வங்கிக் கணக்கை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆர்.கே சுரேஷ் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் சந்தேகப்படும் படியான பணபரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகையால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது வங்கிக் கணக்கை முடக்கம் செய்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: பிபிஜி சங்கர் கொலை விவகாரம்: கொலையாளிகளுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சகோதரர் மனைவி
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தேசிய அளவில் கவனம் பெற தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து சிக்கி வரும் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு மோசடியை போலீசார் முழுமையாக வெளிக் கொண்டு வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Crime News