முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி

இவர்கள், குறித்து நேரிலோ அல்லது செல்போன் மூலமாகவோ துப்பு கொடுப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் சுமார் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி இரண்டாயிரத்து 438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்ததாக விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் பா.ஜ.கவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

கட்டாயம் வாசிக்க: சதுரங்க வேட்டை பட பாணியில் பணம் இரட்டிப்பு.. ஆரணியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனம் - ஆக்‌ஷனில் இறங்கிய வருவாய்துறை

மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜசேகர், நாராயணி உட்பட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள், குறித்து நேரிலோ அல்லது செல்போன் மூலமாகவோ துப்பு கொடுப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன், தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர். முன்னதாக இந்த மோசடி வழக்கில் நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: BJP, Fraud, Tamil Nadu