முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வங்க கடலில் உருவாகிறது புதிய புயல்.. மழை வெளுத்து வாங்க வாய்ப்பு

வங்க கடலில் உருவாகிறது புதிய புயல்.. மழை வெளுத்து வாங்க வாய்ப்பு

மழை

மழை

Weather Update | வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 8ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை... இன்றைய நிலவரம்?

7 முதல் 10ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 7ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Bay of Bengal, Weather News in Tamil