தமிழக அமைச்சரவை 3வது முறையாக நேற்று மாற்றியமைக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அதி முக்கியத்துவம் வாய்ந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் ஒரு ஒற்றுமை, ஒரு வேற்றுமை உள்ளது.
மு.கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தங்கபாண்டியன் திடீரென மரணம் அடைந்ததால் அருப்புக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. தங்கபாண்டியனின் மகன் தங்கம் தென்னரசுவை அரசியலுக்கு அழைத்தார் கருணாநிதி. பொறியியல் பட்டம் பெற்று ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றிவந்த தங்கம் தென்னரசு உடனடியாக தனது பணியிலிருந்து விலகி அரசியலுக்கு வந்தார். திமுக வேட்பாளராக தங்கம் தென்னரசுவை நிறுத்தி வெற்றிபெறச் செய்தார் கருணாநிதி.
இதையும் படிக்க : கருணாநிதி... ஓபிஎஸ்... பிடிஆர்... தமிழ்நாட்டில் நிதி அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் முழு பட்டியல்...!
மு.கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிடிஆர் பழனிவேல்ராஜன் திடீரென மரணம் அடைந்தார். மதுரை மத்திய தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. பழனிவேல் ராஜனின் மகன் பழனிவேல் தியாகராஜனை அரசியலுக்கு அழைத்தார் கருணாநிதி. அமெரிக்காவில் பணியாற்றி வந்ததால் அந்த வாய்ப்பை தியாகராஜன் ஏற்கவில்லை. அதன்பிறகு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வர தியாகராஜன் விரும்பியபோது 2016 தேர்தலில் அவருக்கு வாய்ப்பளித்து எம்.எல்.ஏவாக்கினார் கருணாநிதி.
கருணாநிதி சொன்னதும் உடனடியாகச் செய்தார் தங்கம் தென்னரசு. கருணாநிதி சொன்னதை பின்னாளில்தான் செய்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
- ஆர்.முத்துகுமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, DMK leader Karunanidhi, Minister Palanivel Thiagarajan, Thangam Thennarasu