முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முகத்தை உடைத்துவிடுவேன்... மாற்றுத் திறனாளியை பேருந்தில் ஏற்ற மறுத்து மிரட்டிய நடத்துநர் பணியிடை நீக்கம்

முகத்தை உடைத்துவிடுவேன்... மாற்றுத் திறனாளியை பேருந்தில் ஏற்ற மறுத்து மிரட்டிய நடத்துநர் பணியிடை நீக்கம்

பேருந்து ஓட்டுநர்

பேருந்து ஓட்டுநர்

சென்னையில் அரசுப் பேருந்தில் மாற்றுத் திறனாளியை ஏற்ற மறுத்த நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா உள்ளார். அவர், சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் டி.என்.எஸ்.டி.சிக்கு சொந்தமான கழிவறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகையில் பயணிப்பதற்காக அந்த பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, அந்த பேருந்தின் நடத்துநர் இந்தப் பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அனுமதி இல்லை எனக் கூறி பேருந்தில் ஏறக்கூடாது எனக் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த சச்சின் சிவா, ‘இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என்று தெரிவித்தார். அதற்கு மாற்றுத் திறனாளி சிவைப் பார்த்து, முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறிய மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது, ‘அப்படிதான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது என்று கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துள்ளார். அதனையடுத்து, மாற்றுத் திறனாளி சிவா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், காவல்துறையினர் முன்பாகவே நீ மதுரைக்கு வா பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)



சிவாவை பேருந்தில் ஏற்றாமலேயே அப்படியே விட்டுச் சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் மாற்றுத் திறனாளி சிவாவை பேருந்தில் ஏற்ற மறுத்து மிரட்டல் விடுத்த நடத்துநர் பணியிடை நீக்கம் செய்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

First published:

Tags: Chennai