ஒரே நபரின் புகைப்பட அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் 5,000 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணையில் சுமார் 5,000 செல்போன் எண்கள் இதேபோன்று பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. (உதாரணமாக முருகன் என்ற பெயரில் அவரது புகைப்பட அடையாளத்தை வைத்து 5 ஆயிரம் செல்போன் சிம்கள் பயன்படுத்தப்பட்ட வருகிறது )
எத்தனை நபர்களின் அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் எவ்வளவு போலியான சிம் கார்டுகள் இயங்கி வருகின்றன என்பது குறித்து மாநில சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் ஈடுபட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல, சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் 20,000 செல்போன் எண்களை சமீப காலங்களில் முடக்கியுள்ளதாகவும், மேற்கொண்டு முடக்க முயற்சித்து செய்து வருவதாகவும் மாநில சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: SIM Card