முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகம் முழுவதும் புதிதாக 500 அங்கன்வாடி கட்டிடங்கள்.. அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு...

தமிழகம் முழுவதும் புதிதாக 500 அங்கன்வாடி கட்டிடங்கள்.. அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு...

அங்கன்வாடி மையங்கள்

அங்கன்வாடி மையங்கள்

தமிழகத்தில் புதிதாக 500 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் புதிதாக 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், அவரின் தொகுதியில் அங்கன்வாடி அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கீதாஜீவன், ’தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் இருப்பதாகவும், சொந்த கட்டிடத்தில் 7,654 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Also Read : அடுத்த 5 நாளைக்கு மழை இருக்கு.. குட் நீயூஸ் சொன்ன வானிலை மையம்

இந்த ஆண்டு 500 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதனை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Anganvadi, TN Assembly