சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகள் ரத்து செய்யப்பட்டதது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தைத் தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை கடுமையானது என்று அன்புமணி கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு கேமிராக்கள் சரியாகச் செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்து, மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயமில்லை என்றும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த கல்லூரிகளில் மொத்தமாக 500 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. தவறுகள் குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் விளக்கம் அளித்து பின்னர் கூட, இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பது மருத்துவக் கல்வியை வழங்குவதில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
Also Read : நாகை என்ன உபியில் உள்ளதா? ஹிஜாப்பைக் கழட்டச் சொன்ன பாஜக நிர்வாகிக்கு கடும் கண்டனம்
தொடர்ந்து, உடனடியாக ஆணையம் சூட்டி காட்டிய குறைகளைத் தமிழ்நாடு அரசு சரிசெய்ய வேண்டும் என்றும், தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2023-24ஆம் கல்வியாண்டில் 500 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.