கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 4 மாதங்களில் 221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக போலி கடன் செயலியை உருவாக்கி மோசடி கும்பல் கடன் கொடுத்து வந்தது. கொடுத்த பணத்தை விட அதிக தொகையை கேட்டு வாடிக்கையாளர்களை மிரட்டி வந்தனர். கேட்கும் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களது உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களும் அதிகளவில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கக்கோரி கூகுள் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் க்ரைம் கடிதம் எழுதி இருந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக சட்டவிரோதமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த 221 கடன் செயலிகளை கூகுள் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: வங்க கடலில் உருவாகிறது புதிய புயல்.. மழை வெளுத்து வாங்க வாய்ப்பு
மேலும் ட்விட்டர், யூடியூப் போன்றவை தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் என தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் 386 அவதூறு வீடியோக்களை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு கோரிக்கை அனுப்பியுள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத இந்த சட்டவிரோத செயலிகளில் சிக்காமல் பொதுமக்களைப் பாதுகாக்க கூடுதல் 61 லோன் ஆப்களை அகற்ற கோரி மாநில சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber crime, Google play Store, Tamilnadu